Posts

Showing posts from December, 2022
  பவானி கிஸ்மி. எங்கம்மா வாசல்திண்ணையில் உட்கார்ந்துண்டு, எதிர்வீடில் புதுசா குடிவந்த மாமியோட பேசிக் கொண்டிருந்தாள். நான் பஞ்சபாத்ரத்தை உள்ளே வைக்கப் போகும் போது என்னைப் பற்றி கதை ஓட ஆரம்பித்தது. இவன் இப்பதான் பொம்மை காலெஜ்ல படம் போடக் கத்துண்டு , மூணு வருஷமா ஹிண்டு பேப்பர் ஆஃபீஸ்ல வேலைக்கு போய்ண்டிருக்கான். கல்யாணத்துக்குப் பார்திண்டிருக்கோம் ஒண்ணும் தெகயலை... எனக்கு ரூமில செம்ம கோவம்.... வறவா போறவா கிட்டயெல்லாம் இப்படி சொந்தக் கதையெலாம் சொல்லதேன்னு பலதடவை சொல்லிட்டேன். சட்டென சட்டைய மாட்டிண்டு வெளியக் கிளம்பினேன். "அம்மா, கோயிலுக்கு போய்ட்டு வர்ரேன்"... அம்மா என்னை ஏற இறங்கப் பார்த்தாள். எதிராத்து மாமி..."எங்க பவானியயும் கூட்டிண்டு போய்ட்டு வரையாப்பா?" என்றாள். "குழந்தையைக் கூப்பிடுங்கோ! எல்லாம் அழைச்சுண்டு போவான்" இது எங்கம்மா. பெருசாளிய கல்லால் அடிச்சாற் போல மாமி வீரிட்டாள்... "டீ பவானீ".... அன்பு கடைய தாண்டும் போது லைட்டா திரும்பிப் பார்த்தேன். நல்லவேளை... பயலைக் காணோம்..பார்த்து விட்டால் செம்மையா ஓட்டுவான். அவன் மனைவி தான் இருந்தாள். விரை...

ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன அடிச்சுவடுகள். 1974.. வயது 5. "மூடாத குழியும், முழுசாப் பிறக்காத நாய்குட்டியும்"

திருவான்மியூர் மார்கெட்டில் மரவெள்ளிக்கிழங்கை வேகவைத்து விற்று கேசவனை வளர்த்து வந்தாள் அவன் அம்மா. உரைகிணறு இறக்கும் போது அவன் அப்பா மேலே மண் சரிந்ததில், அவர் அப்போது இல்லை. அப்பாவின் சைக்கிளை கேசவன் ஓட்ட கற்றிருந்தான். எனக்கும் ஓட்ட ஆசைதான். அவனிடம் கற்றுக்கொடுக்க சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தேன்.  சைக்கிளின் முக்கோண சந்தினில் காலை விட்டு முக்காப் பெடல் அடிக்க சொல்லிக் கொடுத்தான்.  நானும் தட்டித் தட்டி, தடுமாறி கீழே விழாமல் ஓட்ட கற்றுக் கொண்டிருந்தேன். சீட்டைப் பிடித்துக் கொண்டு கூட ஓடி வருவான்.  அவனைபோல சீட் மேலே ஏறி ஓட்டும் அளவுக்கு அப்போது எனக்குத்  துப்பில்லை. வழக்கமாக ஓட்டும் வால்மீகி நகர் , சீவார்டு ரோடுகளை விடுத்து கொட்டிவாக்கம் குப்பம் ரோட்டில் ஓட்டும் போது, அரசாங்கம் மின்சாரக் கேபிள் இணைப்புக்கு புதிதாக குழி வெட்டியிருந்ததும், அது மூடப் படாமல் இருந்ததும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  பள்ளம் வந்தால், ப்ரேக் ரெண்டையும் அழுத்த சொல்லிக் கொடுத்த கேசவன், அது ரெண்டும் பிடிக்காது என்று சொல்ல மறந்து விட்டான். ஆறடி ஆழத்தில் நீளமாக வெட்டியிருந்த பள்ளத்தில் தலை...

1985 ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன சுவடுகள். எல்லோராவும் எண்ணெய்ப் பிசுக்கும்.

 அகமதாபாதில் இருந்து அவுரங்காபாத் வந்து, அங்கே இருந்து அஜந்தா குகை ஓவியங்களும், சிலைகளையும் பார்த்து விட்டு, கொலை பசியுடன், எல்லோரா குகைக் கோவில்கள் இருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்தோம்.  எங்கள் ஓவியக் கல்லூரியின் வருடாந்திர டூர், எங்களுக்கு இந்தியாவின் கலைநயமிக்க  இடங்களையும், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் அனுபவ முறையில் படிப்பிக்கும். எல்லோரும் வரைந்து தள்ளுவோம். "அசோகா ஓட்டலில்" நண்பர்கள் கிடைத்தையைல்லாம் தின்றனர். மாந்தோப்பு வழியாக நடந்து போனால் 3 கிலோ மீட்டரில், எல்லோரா கிராமம் வரும். அந்த ஊரின் சத்திரத்தில் ஒருநாள் தங்கி மறுநாள்  குகைகளைப் பார்ப்பது என முடிவானது.  "அய்யரே! எண்ணெய்க்கு ஹிந்தில என்னா பேரு? என்று டவலோடு வந்தான் முனிச்சாமி. "சீக்கிரம் சொல்லுயா குளிக்கப் போவணுமில்ல? உடம்பெல்லாம் ஒரே சூடாகிடுச்சு என்றான் ராஜா செல்வன்.  "தேல்" என்றால் ஆயில்...சொல்லி வாங்கிக்கங்க என்றேன் நான். அது ஒரு 16ம் நூற்றாண்டின் கிராமம்.  2 புட்டி "தேலுடன்" வந்தனர். ஆனந்தமாக முனிசாமி தடவிக் கொண்டான். ராஜாசெல்வனும் தடவிக் கொண்டு ஜிம்பாடியும், காட்பாடியுமாய்...
Image
  ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன அடிச்சுவடுகள். 1998 "சைகோ" ************ அடையாரிலிருந்து, கோட்டூர்புரம் போகும் பிரதான வழி அகலமாக இருக்கும். அதில் வீராணம் குழாய் போன்ற பெரிய குழாய்களைப் பதிக்க, ஆழமான பள்ளம் வெட்டி அவசரமாக பதித்து மூடியும் இருந்தனர். ரோடு பல இடங்களில் முறையாக போடப் படவில்லை. அங்கங்கே தூக்கிக் கொண்டு பூகம்பம் வந்தார்ப் போல, மிகவும் அபாயகரமான நிலைமையில் இருந்தது. 7.00 மணிக்கு ஆனந்த் தியேட்டரில் "சைகோ" திரைப்படம் பார்க்க, சுசூகி பைக்கில் விரைந்து கொண்டிருந்தேன். இந்த ரோடு எனது வேகத்தை கணிசமாகக் குறைத்திருந்தது. சென்னை மாநகரத்தில், பைக்குகளை மாற்றி வடிவமைக்கும் கலாச்சாரமும், டெக்னோ சைரன் வகையான பயங்காட்டும் பைக் ஹாரன்களும் அறிமுகமாகி இருந்தன. இவை நம் பக்கத்தில் ஒலிக்கப் படும்போது நம்மை செயலிழக்க செய்துவிடும். எனது வண்டியை ஒரு பங்க் (punk) மண்டையனும் அவனது வெள்ளை கேர்ள் பிரண்டும் , அவனைபோலவே இருந்த ஒல்லிகுச்சான் பைக்கில் கடந்து விரைந்தனர். எக்சிபிஷனில் அபாயகிணற்றில் ஓடும் பைக்கின் சத்தம் வரப் பண்ணி இருந்தான். பாம்பு போல வளைந்து வளைந்து ஓட்டியவ...
 ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்ன சின்ன சுவடுகள். 1988 ரிடையர்மென்ட் ********************** மவுண்ட் ரோடில், நியூஸ் பேப்பர் கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது. ஒருநாள் மதியம்... "இங்கே யாரு சார் சூப்பர்வைசர்? கோவத்துடன் நண்பன், எச்சில் கையுடன் சமையல் அறையில் நுழைந்தான். என் நண்பன் பாலு. பின்னாலேயே தட்டுடன் நானும். ஒரு பெரியவர் ஓடி வந்தார். "ஏன் சார், என்ன ஆச்சு?" என்று கேட்டபடி. "இவரு புதுசா சேர்ந்த ஆர்டிஸ்ட். இவருக்கு போட்ட தயிர் சாதத்துல எவ்வளவு பெரிய குண்டூசி கிடக்குது பாருங்க!" என்றான். "நீட்டுயா உன்னோட தட்டை" என்றான் பாலு. நீட்டினேன். ஒண்ணரை இஞ்ச் நீளம். ஸ்டீல் குண்டூசி. பெரியவர் ஆடிப் போய் விட்டார். கிடு கிடு வென கூட்டம் சேர ஆரம்பித்தது. சமையலறையில் கூட்டம் அதிகமாகவே அனைவரும் வெளியில் வந்தோம். அதற்குள் யாரோ ஒருவர், " ஏம்பா யாராவது தலைவருக்கு சொல்லிட்டீங்களா?" "தலைவர் ஊர்ல இல்லிங்க சார்! சங்கத்துல நீங்க மெம்பராகிட்டீங்களா?" என்றார் மற்றவர். நாங்கள் வேலைக்கு சேர்ந்தே நாலு மாசம் கூட ஆகவில்லை. " தப்பு நடந்து போச்சு, நீங்க தான் ...

1993 நன்மை பயக்குமெனின் பொய்மையும் வாய்மை இடத்து'

  8 வாரம், புகழ் பெற்ற பிரசாத் வீடியோ டிஜிட்டலில் (PVD) டிரெய்னிங்.. அகமதாபாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனில் இருந்து சென்னை வந்திருந்த எனக்கு, வீரா படப் பாடல்கள் இனிமையாக இருந்தன. "வந்ததுதான் வந்தே, அப்படியே இங்கிருக்கும் போதே, ஒரு பொண்ணைப் பார்த்து ஓகே பண்ணிட்டு போயிட்டேன்னால், ஒரு வருஷத்துத்துல, கல்யாணம் வச்சிக்கலாமோல்யோ?" இது என் அம்மா.. நான் நிமிர்ந்து பார்த்தேன். "அம்மா இன்னும் 3 செமஸ்டர் பாக்கி இருக்கும்மா.. முடிச்சு வர இன்னும் குறைந்தது இரண்டு வருஷமாவது ஆகும்மா" என்றேன். கவனத்தை பிரசாத் ஸ்டுடியோவின் பக்கம் திருப்பினேன். தாத்தா L.V.Prasaad ஆரம்பித்த ஸ்டூடியோ அவரது பேரன், சாய் பிரசாத் பொறுப்பில் இருந்தது. மஹா அறிவாளி, அமெரிக்காவில் படித்தவர். கடுமையான தீ விபத்துக்குப் பின், கம்பெனியை எழுப்பி நிறுத்தியிருந்தார். மதியம், அனிதா, ஜென்னி இருவரையும், சாப்பிடும்போது பாலாஜி அறிமுகப் படுத்தினான். இருவரும் சகஜமாக பேசினர். அனிதா ஹிந்தியிலும் வேகமாகப் பேசினாள். ஓவியனாகும் அடிப்படைத் தகுதி, நல்ல ரசிகனாக இருக்க வேண்டும். நான் இவர்களை ஒவியனான பின்னும் ரசிக்கத்தொடங்கி இரு...

புன்முறுவல்

Image
  "இரத்தம் ஒரே நிறம்" குமுதத்தில் வந்தபோது, சுஜாதா சாருடன், ஓவியர் ம.செ. எனும் மணியம் செல்வன் இணைகிறார். ஆலப்பாக்கம் முத்துக்குமரனும் , மக்கிசின்சியும், பூவும், தாண்டவராயனும், எமிலியும், 4 வண்ண ஹாப்செட் கலரில் எங்களை அலைக்கழித்தனர். சூப்பர் வேகத்தில் ஆரம்பித்த வரலாற்று நவீனம். ம.செ.,சுஜாதா சார் கனெக்சன் தொடர்ந்து கொண்டேயிருந்தது இந்தக் கதை பாரதிராஜா சாரால் படமாக்கப் படும் வரை. ம.செ அவர்கள் இந்தப் படத்தின் கலை இயக்குநரானார். இதற்கு நடுவே, திரு.ம. செ அவர்களால் எனது கலைத் துறை வாழ்க்கை நெறிப்படுத்தப் பட்டு, ஓவியக் கல்லூரியில் சேர்ந்து, ஓவியனாகியிருந்தேன். சிலிக்கான் சில்லுப் புரட்சியும், என் இனிய இயந்திராவும் வரி வடிவில் எங்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து இருந்தனர். கம்ப்யூட்டர் அறிவு இல்லாவிட்டால் எதிர்காலம் இருண்டுவிடும் எனும் சுஜாதா சாரின், வரிகளின் தாக்கம் என்னை கம்ப்யூட்டர் பயில வைத்தது. சம்பளம் 400. கம்ப்யூட்டர் கிளாஸ் ரேட் 500. "ஆட்டோ காட்" மென்பொருள் படிப்பு, 1986ல் சென்னைக்குள் அடி எடுத்து வைத்திருந்தது. வரை கலைக்கு மவுஸ் பயன்படுத்தாத காலம், அரை நாள் புரோகிராம்...

1979 ஜெய் எனும் கிருஷ்ண சாமியின், சின்னச் சின்ன சு'வடு'கள். மருந்தீஸ்வரரும், மழைப் பாட்டும்.

Image
வாசலிலிருந்து குமார் சிக்னல் கொடுத்தான். லைட்டா ஜன்னலை திறந்து "என்னடா ?" என்றேன். "நம்ம திருவான்மியூர் கோவில்ல ஷூட்டிங்காம், போலாமா?" என்றான் கிசு கிசு குரலில். அப்பவே ராத்திரி மணி எட்டு. எங்கப்பா இன்னும் வீட்டுக்கு வரலை. "நைட்டு ஷூட்டிங், பெரிய ஃபயர் என்ஜின் கொண்டுவந்து இருக்காங்க! தெலுங்கு படமாம் டான்சு நிச்சயம்!" என்றான் குமார். அம்மா, "இன்னக்கி குமார் வீட்டுல படிச்சுட்டு கார்த்தால வரேம்மா" பதிலுக்கு காத்திராமல், கையில கிடைச்ச நாலு புஸ்தகத்துடன் எஸ்கேப். அவங்க வீட்டுலிருந்து, எங்க வீட்டுல படிக்கிறதா சொல்லிவிட்டு, அவன் எஸ்கேப். கோவில் மடப்பள்ளி ஓரமா இருக்கும் சின்ன அறைகளில் வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு சமைத்துக் கொண்டிருந்தனர். பெரிய பெரிய லைட்டுகள், ஜெனரேட்டர் வேன்கள், வெள்ளி ஜரிகை பேப்பர் ஒட்டிய பிளைவுட் போர்டுகள், தெலுங்கில் பேசிக் கொண்டு நிறைய மக்கள். ஆறு பேர் சேர்ந்து தண்டவாளம் போட்டுக் கொண்டிருந்தனர். அதன் மேலே, நாலு வீல் வச்ச பலகைமேலே காமெரா வைத்தனர். "மச்சி! அங்கே அம்மன் சன்னதி பக்கம் போயி பார்க்கலாம், யாரு நடிக்கராங்கன்னே ...

தெய்வம் அமர்ந்தும் . . .

பரசுராமன் செய்யும் இரும்புப் பட்டறைத் தொழிலில் கிடைக்கும் காசைச் சேர்த்து, கஷ்டப் பட்டு வாங்கிய நிலம். சங்கிலிப் பிடித்து அளந்து, பட்டா போடப் போன இடத்தில், பரசுராமனிடம் லஞ்சம் கேட்டது அதிகார வர்க்கம். அவனால் உடனே புரட்டித் தர முடியாத ஒரு தொகை. "அண்ணா! இரண்டு நாள் முன்னால பட்டா வாங்கப்போன இடத்துல, ஆபீசரு நிறையப் பணம் கேக்குறாருண்ணா, என்ன செய்யுறதுன்னுனே தெரியலை. படப்பைல இருக்குற மாமியாரு, என் புள்ளைக்குப் போட்ட அரணாக் கொடியக் கூட அடமானம் வச்சுட்டேன். நான் தெனிக்கும் வேலை செஞ்சாதான் பொழப்பு நடக்கும்.. ஆபீசரு இப்ப வா, அப்ப வான்னு, அலைய உட்டுகினேகுறாரு! " என்றான். " கட்ச்சியா 10,000 ரூபா கொண்டாந்தீன்னா பட்டா. இல்லீன்ன்னா இல்லீன்னுட்டாரு" என்றான் கைகளைப் பிசைந்தபடி. "வண்டில உக்காரு' என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு கிராம நிர்வாக அலுவரைப் பார்த்துப் பேச புறப்பட்டேன். பாண்டியன் என்னும் அந்த VAO, கொஞ்சங்கூட அசைந்து கொடுக்கவில்லை! எங்கள் கிராமத்துக்கும், சுத்துபட்ட பத்துக் கிராமங்களுக்கும், பாண்டியன்தான் பொறுப்பு என்பதால் அவனைத் தான் நாங்கள் அணுகியாக வேண்டும்....

1990. ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன சு(வடு)கள். கடைசி மாமன்னரும், காணமல் போன காதலும்!

Image
  ஹிண்டு ஆபீசில் மதியம் சோறு தின்ற பின், நண்பர்களுடன் அண்ணா சிலை வரை ஒரு சின்ன நடை தினமும் உண்டு. அவர்கள் ஆளுக்கு ஒரு தம் பற்ற வைப்பார்கள். நான் டீ மட்டும் குடிப்பேன். அப்போது நான் அடிக்கும் மொக்கை ஜோக்குகெல்லம் சந்தோஷமாக சிரிப்பர். ஒரு நாள், நல்லா பட்டை உறிக்கும் வெய்யில். நாங்கள் கீதா கபே வரை நடந்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். "ஸீக்கிரம் போகணும் இல்லைன்னா NVN திட்டுவாரு!" என்றார் உதய ஷன்கர். நான் எங்களுக்கு சற்று முன்னால் போன மூன்று பெண்களில் ஒருத்தியைக் காட்டி, "சரியான லூசு! கொளுத்துர வெய்யிலில் சைனா சில்க் கட்டிக்கிட்டுப் போகுது பாரு!" என்றேன். விஜய் என்னைப் பார்த்து "நீ ஒருநாள் நல்லா உதைப் படப் போறே! அன்னைக்கு தான் உனக்கு புத்தி வரும்"என்றார். நான் "அப்போ பார்த்துக்கலாம்" என்றேன். அந்தப் பெண் சட்டெனத் திரும்பி, "எப்படி இருக்கே ஜெய்"? என்றாள். பகீரென்றது! என் தூரத்து மாமா மகள். எப்போதாவது கல்யாணங்களில் பார்த்தது உண்டு. எங்கம்மா இதுவரை ஆறு முறை பெண் பார்க்கக் கூட்டிபோய் காட்டாத அழகு. பதறிப் போனேன். "அடடா, இவளைப் போயா கி...