1998 பக்கத்து ஆஃபீஸ் ஆணும், பக்கத்து தெரு பெண்ணும்.
ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் அடிச்சுவடுகள். "உன் மனசுல என்னதான் நெனைச்சின்டு இருக்கே! சொல்லித் தொலைக்கலாமோல்லியோ?" என்றாள் என் அம்மா. நிமிர்ந்து பார்த்தேன். "இப்போ அப்போன்னு சொல்லி ஏழு வருஷ மாயிடுத்து. இன்னும் எவ்வளவோ பொண்ணுதான் பார்க்கறது?" எனக்கும் மனதளவில் இனிமேல் பார்க்கும் பெண் final. ஓகே ஆனால் சரி..இல்லையென்றால் இனி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஏழு வருஷமா என்றதும், என்னை எல்லோரும் தப்பாக நினைக்க வேண்டாம். 91ல் எடுக்கப்பட்ட ஜாதகக் கட்டு. இந்தப் படலமே வேண்டாம் என மேல்படிப்புக்கு அகமதாபாத் போய் விட்டு திரும்பி 3 வருஷம் ஆகியிருந்தது. ஹிந்து ஆஃபீஸ் வேலையும் விட்டுவிட்டு, இந்தியன் ஆர்டிஸ்ட் கம்பனியில் 2வருடமாக அனிமேஷன் டைரக்டராகியிருந்தேன். கம்பெனி எக்மோர் ம்யூசியம் எதிரில். தினமும் ஒரு புது பிராஜெக்ட் புதிய அனுபவங்கள், போதாத குறைக்கு பிசினஸ் லைன் நியூஸ் பேப்பரில் எடிட்டோரியல் ஓவியங்களும் தொடர்ச்சியாக வரைந்து கொண்டிருந்தேன்.. சாயுங்காலத்தில் கொஞ்சுவதற்கு... (தப்பாக நினைக்க வேண்டாம்) தங்கையின் குழந்தை. கூட வேலை செய்யும் பெண் சில நாள் வீடு வர...