Posts

1998 பக்கத்து ஆஃபீஸ் ஆணும், பக்கத்து தெரு பெண்ணும்.

ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் அடிச்சுவடுகள். "உன் மனசுல என்னதான் நெனைச்சின்டு இருக்கே! சொல்லித் தொலைக்கலாமோல்லியோ?" என்றாள் என் அம்மா. நிமிர்ந்து பார்த்தேன். "இப்போ அப்போன்னு சொல்லி ஏழு வருஷ மாயிடுத்து. இன்னும் எவ்வளவோ பொண்ணுதான் பார்க்கறது?" எனக்கும் மனதளவில் இனிமேல் பார்க்கும் பெண் final.  ஓகே ஆனால் சரி..இல்லையென்றால் இனி வேண்டாம் என்றுதான் இருந்தேன்.  ஏழு வருஷமா என்றதும், என்னை எல்லோரும்  தப்பாக நினைக்க வேண்டாம்.  91ல் எடுக்கப்பட்ட ஜாதகக் கட்டு.  இந்தப் படலமே வேண்டாம் என மேல்படிப்புக்கு அகமதாபாத் போய் விட்டு  திரும்பி 3 வருஷம் ஆகியிருந்தது. ஹிந்து ஆஃபீஸ் வேலையும் விட்டுவிட்டு, இந்தியன் ஆர்டிஸ்ட் கம்பனியில் 2வருடமாக அனிமேஷன் டைரக்டராகியிருந்தேன்.  கம்பெனி எக்மோர் ம்யூசியம் எதிரில். தினமும் ஒரு புது பிராஜெக்ட் புதிய அனுபவங்கள், போதாத குறைக்கு பிசினஸ் லைன் நியூஸ் பேப்பரில் எடிட்டோரியல் ஓவியங்களும் தொடர்ச்சியாக வரைந்து கொண்டிருந்தேன்.. சாயுங்காலத்தில் கொஞ்சுவதற்கு... (தப்பாக நினைக்க வேண்டாம்) தங்கையின் குழந்தை.  கூட வேலை செய்யும் பெண் சில நாள் வீடு வர...

அதனை அவன்கண் விடல்

இடி விழுந்து சிதிலமடைந்த தேரின் உச்சத்தை சரி செய்யும் வேலைக்குப் பணிக்கப் பட்டேன். நான் ராமன். எங்கள் ரதம், காளையார் கோவில் ரதத்தையும் விஞ்சும் வண்ணம்  உயரமும் அழகும் கொண்டிருக்க வேண்டும் என்பதே பணி. அதற்கு கீழ் தளத்தில் மூன்று அடுக்குகளை பலப்படுத்திய பின் உயரம் கூட்டப்பட வேண்டும்.  இன்னும் ஒரு நிலையை கூட்டினால், தேரின் உயரம் அரண்மனை சாளரத்திற்கும் மேலே வந்து விடும். மேற்பார்வையிட ராஜகுரு காளமேகர் வந்தார்.  "என்னடா இவ்வளவு நாளாக இதே வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள்! எப்போது முடியும்? மன்னர் வேறு, வெள்ளோட்டத்துக்கு  நாள் குறிக்கச் சொல்லி நெருக்குகிறார். தடி மாடுகள் நன்றாக தின்னத் தெரிகின்றது. உங்களுக்கு சரியாக இன்னும் இரு வாரங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள், மேல் அடுக்கினை சிறப்பாக முடித்து, அதற்கு தேவையான சிற்ப வேலைகளையும் அமைத்துக் கொடுக்க வேண்டும். புரிந்ததா?"  என்றபடி வெற்றிலை குழம்பை துப்ப பாத்திரம் தேடினார். சித்திரக் குள்ளன் ஒரு வெண்கலப் பாத்திரத்தை தூக்கிய வண்ணம் படியேறினான். வெள்ளிப் பூண் போட்ட தடியால் ஒரு அடி. தன் இரு கைகளாலும் பாத்திரத்தை தூக்கி நீட்...
  பவானி கிஸ்மி. எங்கம்மா வாசல்திண்ணையில் உட்கார்ந்துண்டு, எதிர்வீடில் புதுசா குடிவந்த மாமியோட பேசிக் கொண்டிருந்தாள். நான் பஞ்சபாத்ரத்தை உள்ளே வைக்கப் போகும் போது என்னைப் பற்றி கதை ஓட ஆரம்பித்தது. இவன் இப்பதான் பொம்மை காலெஜ்ல படம் போடக் கத்துண்டு , மூணு வருஷமா ஹிண்டு பேப்பர் ஆஃபீஸ்ல வேலைக்கு போய்ண்டிருக்கான். கல்யாணத்துக்குப் பார்திண்டிருக்கோம் ஒண்ணும் தெகயலை... எனக்கு ரூமில செம்ம கோவம்.... வறவா போறவா கிட்டயெல்லாம் இப்படி சொந்தக் கதையெலாம் சொல்லதேன்னு பலதடவை சொல்லிட்டேன். சட்டென சட்டைய மாட்டிண்டு வெளியக் கிளம்பினேன். "அம்மா, கோயிலுக்கு போய்ட்டு வர்ரேன்"... அம்மா என்னை ஏற இறங்கப் பார்த்தாள். எதிராத்து மாமி..."எங்க பவானியயும் கூட்டிண்டு போய்ட்டு வரையாப்பா?" என்றாள். "குழந்தையைக் கூப்பிடுங்கோ! எல்லாம் அழைச்சுண்டு போவான்" இது எங்கம்மா. பெருசாளிய கல்லால் அடிச்சாற் போல மாமி வீரிட்டாள்... "டீ பவானீ".... அன்பு கடைய தாண்டும் போது லைட்டா திரும்பிப் பார்த்தேன். நல்லவேளை... பயலைக் காணோம்..பார்த்து விட்டால் செம்மையா ஓட்டுவான். அவன் மனைவி தான் இருந்தாள். விரை...

ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன அடிச்சுவடுகள். 1974.. வயது 5. "மூடாத குழியும், முழுசாப் பிறக்காத நாய்குட்டியும்"

திருவான்மியூர் மார்கெட்டில் மரவெள்ளிக்கிழங்கை வேகவைத்து விற்று கேசவனை வளர்த்து வந்தாள் அவன் அம்மா. உரைகிணறு இறக்கும் போது அவன் அப்பா மேலே மண் சரிந்ததில், அவர் அப்போது இல்லை. அப்பாவின் சைக்கிளை கேசவன் ஓட்ட கற்றிருந்தான். எனக்கும் ஓட்ட ஆசைதான். அவனிடம் கற்றுக்கொடுக்க சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தேன்.  சைக்கிளின் முக்கோண சந்தினில் காலை விட்டு முக்காப் பெடல் அடிக்க சொல்லிக் கொடுத்தான்.  நானும் தட்டித் தட்டி, தடுமாறி கீழே விழாமல் ஓட்ட கற்றுக் கொண்டிருந்தேன். சீட்டைப் பிடித்துக் கொண்டு கூட ஓடி வருவான்.  அவனைபோல சீட் மேலே ஏறி ஓட்டும் அளவுக்கு அப்போது எனக்குத்  துப்பில்லை. வழக்கமாக ஓட்டும் வால்மீகி நகர் , சீவார்டு ரோடுகளை விடுத்து கொட்டிவாக்கம் குப்பம் ரோட்டில் ஓட்டும் போது, அரசாங்கம் மின்சாரக் கேபிள் இணைப்புக்கு புதிதாக குழி வெட்டியிருந்ததும், அது மூடப் படாமல் இருந்ததும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  பள்ளம் வந்தால், ப்ரேக் ரெண்டையும் அழுத்த சொல்லிக் கொடுத்த கேசவன், அது ரெண்டும் பிடிக்காது என்று சொல்ல மறந்து விட்டான். ஆறடி ஆழத்தில் நீளமாக வெட்டியிருந்த பள்ளத்தில் தலை...

1985 ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன சுவடுகள். எல்லோராவும் எண்ணெய்ப் பிசுக்கும்.

 அகமதாபாதில் இருந்து அவுரங்காபாத் வந்து, அங்கே இருந்து அஜந்தா குகை ஓவியங்களும், சிலைகளையும் பார்த்து விட்டு, கொலை பசியுடன், எல்லோரா குகைக் கோவில்கள் இருக்கும் ஊருக்கு வந்து சேர்ந்தோம்.  எங்கள் ஓவியக் கல்லூரியின் வருடாந்திர டூர், எங்களுக்கு இந்தியாவின் கலைநயமிக்க  இடங்களையும், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் அனுபவ முறையில் படிப்பிக்கும். எல்லோரும் வரைந்து தள்ளுவோம். "அசோகா ஓட்டலில்" நண்பர்கள் கிடைத்தையைல்லாம் தின்றனர். மாந்தோப்பு வழியாக நடந்து போனால் 3 கிலோ மீட்டரில், எல்லோரா கிராமம் வரும். அந்த ஊரின் சத்திரத்தில் ஒருநாள் தங்கி மறுநாள்  குகைகளைப் பார்ப்பது என முடிவானது.  "அய்யரே! எண்ணெய்க்கு ஹிந்தில என்னா பேரு? என்று டவலோடு வந்தான் முனிச்சாமி. "சீக்கிரம் சொல்லுயா குளிக்கப் போவணுமில்ல? உடம்பெல்லாம் ஒரே சூடாகிடுச்சு என்றான் ராஜா செல்வன்.  "தேல்" என்றால் ஆயில்...சொல்லி வாங்கிக்கங்க என்றேன் நான். அது ஒரு 16ம் நூற்றாண்டின் கிராமம்.  2 புட்டி "தேலுடன்" வந்தனர். ஆனந்தமாக முனிசாமி தடவிக் கொண்டான். ராஜாசெல்வனும் தடவிக் கொண்டு ஜிம்பாடியும், காட்பாடியுமாய்...
Image
  ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்னச் சின்ன அடிச்சுவடுகள். 1998 "சைகோ" ************ அடையாரிலிருந்து, கோட்டூர்புரம் போகும் பிரதான வழி அகலமாக இருக்கும். அதில் வீராணம் குழாய் போன்ற பெரிய குழாய்களைப் பதிக்க, ஆழமான பள்ளம் வெட்டி அவசரமாக பதித்து மூடியும் இருந்தனர். ரோடு பல இடங்களில் முறையாக போடப் படவில்லை. அங்கங்கே தூக்கிக் கொண்டு பூகம்பம் வந்தார்ப் போல, மிகவும் அபாயகரமான நிலைமையில் இருந்தது. 7.00 மணிக்கு ஆனந்த் தியேட்டரில் "சைகோ" திரைப்படம் பார்க்க, சுசூகி பைக்கில் விரைந்து கொண்டிருந்தேன். இந்த ரோடு எனது வேகத்தை கணிசமாகக் குறைத்திருந்தது. சென்னை மாநகரத்தில், பைக்குகளை மாற்றி வடிவமைக்கும் கலாச்சாரமும், டெக்னோ சைரன் வகையான பயங்காட்டும் பைக் ஹாரன்களும் அறிமுகமாகி இருந்தன. இவை நம் பக்கத்தில் ஒலிக்கப் படும்போது நம்மை செயலிழக்க செய்துவிடும். எனது வண்டியை ஒரு பங்க் (punk) மண்டையனும் அவனது வெள்ளை கேர்ள் பிரண்டும் , அவனைபோலவே இருந்த ஒல்லிகுச்சான் பைக்கில் கடந்து விரைந்தனர். எக்சிபிஷனில் அபாயகிணற்றில் ஓடும் பைக்கின் சத்தம் வரப் பண்ணி இருந்தான். பாம்பு போல வளைந்து வளைந்து ஓட்டியவ...
 ஜெய் எனும் கிருஷ்ணசாமியின் சின்ன சின்ன சுவடுகள். 1988 ரிடையர்மென்ட் ********************** மவுண்ட் ரோடில், நியூஸ் பேப்பர் கம்பெனியில் வேலை கிடைத்திருந்தது. ஒருநாள் மதியம்... "இங்கே யாரு சார் சூப்பர்வைசர்? கோவத்துடன் நண்பன், எச்சில் கையுடன் சமையல் அறையில் நுழைந்தான். என் நண்பன் பாலு. பின்னாலேயே தட்டுடன் நானும். ஒரு பெரியவர் ஓடி வந்தார். "ஏன் சார், என்ன ஆச்சு?" என்று கேட்டபடி. "இவரு புதுசா சேர்ந்த ஆர்டிஸ்ட். இவருக்கு போட்ட தயிர் சாதத்துல எவ்வளவு பெரிய குண்டூசி கிடக்குது பாருங்க!" என்றான். "நீட்டுயா உன்னோட தட்டை" என்றான் பாலு. நீட்டினேன். ஒண்ணரை இஞ்ச் நீளம். ஸ்டீல் குண்டூசி. பெரியவர் ஆடிப் போய் விட்டார். கிடு கிடு வென கூட்டம் சேர ஆரம்பித்தது. சமையலறையில் கூட்டம் அதிகமாகவே அனைவரும் வெளியில் வந்தோம். அதற்குள் யாரோ ஒருவர், " ஏம்பா யாராவது தலைவருக்கு சொல்லிட்டீங்களா?" "தலைவர் ஊர்ல இல்லிங்க சார்! சங்கத்துல நீங்க மெம்பராகிட்டீங்களா?" என்றார் மற்றவர். நாங்கள் வேலைக்கு சேர்ந்தே நாலு மாசம் கூட ஆகவில்லை. " தப்பு நடந்து போச்சு, நீங்க தான் ...